நிரந்தர குடியுரிமை சான்றிதழ் விவகாரம் கவர்னரிடம் பா.ஜ., தலைவர்கள் மனு
பெங்களூரு: நிரந்தர குடியுரிமை சான்றிதழ் விவகாரம் தொடர்பாக, கர்நாடக கவர்னரிடம் நேற்று, பா.ஜ., தலைவர்கள் மனு அளித்தனர். க ர்நாடகாவில் பத்து ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்கள், நிரந்தர குடியுரிமை சான்றிதழ் பெறும் அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு பா.ஜ., கடும் எதி ர்ப்பு தெரிவித்துள்ளது. வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்தோரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க அரசு முயற்சி செய்வதாக, அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இந்நிலையில், சட்டச பை எதிர்க் கட்சி தலைவர் அசோக் தலைமையிலான பா.ஜ., தலைவர்கள், லோக் பவனில் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேற்று சந்தித்து, நிரந்தர குடியுரிமை சான்றிதழ் அறிவிப்பை அரசு திரும்ப பெற உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தனர். பின், அசோக் அளித்த பேட்டி: நிரந்தர குடியுரிமை சான்றிதழ் வழங்கி, வெளிநாட்டினருக்கு ரேஷன், சுகாதார அட்டைகள், பிற வசதிகள் செய்து கொடுக்க அரசு முயற்சிக்கிறது. தடை செய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் மீதான வழக்கை அரசு திரும்ப பெறுகிறது. கர்நாடகாவில் 30 லட்சம் வங்கதேசத்தினர் வசிக்கின்றனர். ஜி.பி.ஏ., மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களில் வெற்றி பெற, காங்கிரஸ் தேச விரோத நடவடிக்கையை எடுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.