உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு நிவாரணம் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் முடிவு

கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு நிவாரணம் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் முடிவு

பெங்களூரு : கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் இறந்த விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி, பெங்களூரு விதான் சவுதா வளாகத்தில் உள்ள, காந்தி சிலை அருகே பா.ஜ.,வினர் நேற்று காலை போராட்டம் நடத்தினர்.எதிர்க்கட்சித் தலைவர் அசோக், மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணா ஆகியோர் தலைமையில் நடந்த போராட்டத்தில், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள், தொண்டர்கள் பங்கேற்றனர். அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.பின் எதிர்க்கட்சித் தலைவர் அசோக் அளித்த பேட்டி:கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, மாநில அரசு சரியான நிவாரணம் வழங்கவில்லை. வெற்றிக் கொண்டாட்டம் பெயரில், 11 பேரை காவு வாங்கியது. இது கொலைகார அரசு. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க தயங்குகிறது. அரசு திவால் ஆகவில்லை என்றால், ஒரு கோடி ரூபாய் வழங்கட்டும்.எங்கள் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.,க்களும், ஒரு மாத ஊதியத்தை நிவாரணம் வழங்க முடிவு செய்துள்ளோம். கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு, ஆறுதல் கூற வேண்டிய முதல்வர், தன் பேரனுடன் மசாலா தோசை சாப்பிட சென்றார். துணை முதல்வர் பரிசு கோப்பையை முத்தமிடுகிறார்.போலீசாரை குற்றவாளியாக்கி, அவர்களை பலிகடா ஆக்குவது சரியா?உத்தரவு பிரதியில் அரசு நிகழ்ச்சி என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அரசு நிகழ்ச்சி அல்ல என, முதல்வர் கூறுகிறார். நான் உறுதியாக கூறுகிறேன். அது அரசு நிகழ்ச்சிதான். தன் தவறை மூடி மறைக்க, சாலையில் போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்த கமிஷனரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். இது தவறு.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை