உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / முஸ்லிம் ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்தால் சட்டசபைக்கு உள்ளே பா.ஜ., போராட்டம்

முஸ்லிம் ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்தால் சட்டசபைக்கு உள்ளே பா.ஜ., போராட்டம்

பெங்களூரு: ''முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டால், சட்டசபையில் பா.ஜ., போராட்டம் நடத்தும்,'' என, பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.பெங்களூரில் அவர் கூறியதாவது:அரசு டெண்டர்களில் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீடு மசோதா, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டால், பா.ஜ., கடும் போராட்டங்களை சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் நடத்தும்; அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.காங்கிரஸ் அரசு, ஏன் முஸ்லிம்களுக்கு மட்டும் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்குகிறது? ஹிந்து மதத்தில் உள்ள ஏழைகளுக்கு ஏன் வழங்க மறுக்கிறது? அப்படியென்றால் ஹிந்து மதத்தில் ஏழைகளே இல்லையா என்ற கேள்வி எழுகிறது.மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கு பதிலாக, காங்கிரஸ் அரசு பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறது. காங்கிரஸ் தலைவர்கள், மக்களை தவறான பாதையில் வழிநடத்துகின்றனர்.நாங்கள், முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல; காங்கிரசின் ஓட்டு வங்கி அரசியலையும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் திருப்திப்படுத்தும் நடவடிக்கையையும் எதிர்க்கிறோம்.பா.ஜ., ஆட்சியில் தான், அப்துல் கலாம், நம் நாட்டின் ஜனாதிபதியாகவும்; நஜ்மா ஹெப்துல்லா, அப்துல் நசீர், முகமது ஆரிப் கான் உள்ளிட்டோர் கவர்னர்களாகவும் நியமிக்கப்பட்டனர் என்பதை சிவகுமார் கவனத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை