விஜயேந்திராவுக்கு எதிராக பா.ஜ.,வில் மீண்டும் போர்க்கொடி
பெங்களூரு: கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திரா விஷயத்தில், கட்சியில் மீண்டும் அதிருப்தி அலை வீசத் துவங்கியுள்ளது. அவரை மாற்றும்படி, ஒரு கோஷ்டி மேலிடத்துக்கு நெருக்கடி கொடுக்கிறது. ஆளுங்கட்சி காங்கிரசை போன்று, எதிர்க்கட்சியான பா.ஜ.,விலும் உட்கட்சி பூசல் உள்ளது. மாநில தலைவர் விஜயேந்திரா மீதான அதிருப்தி, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இவரை மாற்றும்படி கட்சியில் ஒரு கோஷ்டி, மேலிடத்துக்கு நெருக்கடி கொடுக்கிறது. விஜயேந்திராவால் கட்சியை பலப்படுத்த முடியவில்லை. காங்கிரஸ் அரசுக்கு எதிராக, பல அஸ்திரங்கள் கிடைத்தும், அவற்றை விஜயேந்திரா சரியாக ப யன்படுத்தவில்லை என, பா.ஜ.,வின் சில த லைவர்கள் எரிச்சலில் உள்ளனர். இதுதொடர்பாக அதிருப்தி கோஷ்டியினர் கூறியது: மாநிலத்தில் கட்சி வலுவிழந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் கட்சிக்கு எதிர்காலமே இருக்காது. வரும் நாட்களில் கிரேட்டர் பெங்களூரு ஆணைய தேர்தல், மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தல்கள் நடக்கவுள்ளன. இன்னும் இரண்டரை ஆண்டுகளில், கர்நாடக சட்டசபை தேர்தல் நடக் கும். இந்த தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தி, வெற்றி பெற வைத்து, ஆட்சியில் அமர்த்தும் திறன் விஜயேந்திராவுக்கு இல்லை. இவரை தவிர வேறு திறமையான தலைவரை, மாநில தலைவர் பதவியில் அமர்த்த வேண்டும். விஜயேந்திரா மீதான அதிருப்தி கோஷ்டியில், முன்னாள் எம்.பி.,க்கள் சித்தேஸ்வர், பிரதாப் சிம்ஹா, முன்னாள் அமைச்சர்கள் குமார் பங்காரப்பா, அரவிந்த் லிம்பாவளி, ரமேஷ் ஜார்கிஹோளி, எம்.எல்.ஏ., ஹரிஷ் உட்பட, சில தலைவர்கள் உள்ளனர். மேலிடமும் இதை பற்றி ஆலோசிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். மாநில தலை வர் பதவி மீது, மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் சோமண்ணாவும் கண் வைத்துள்ளார். தனக்கு மாநில தலைவர் பதவி வழங்கினால், மத்திய அமைச்சர் பதவியை விட்டுத்தர தயாராக இருப்பதா க, மேலிடத்திற்கு தகவல் அனுப்பியதாக மாநில கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அத்துடன், மூத்த தலைவர் ரவி, முன்னாள் துணை முதல்வர் அஸ்வத் நாராயணா, முன்னாள் அமைச்சர்கள் அரவிந்த் லிம்பாவளி, சுனில் குமார், பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் ஷோபா உட்பட, பல தலைவர்களும் மாநில தலைவர் பதவியை எதிர்பார்க்கின்றனர். த ற் போது பீஹார் சட்டசபை தேர்தல் பணிகளில், பா.ஜ., மேலிட தலைவர்கள் பரபரப்பாக உள்ளனர். அம்மாநில தேர்தல் முடிந்த பின், கர்நாடக மாநில தலைவர் விஷயத்தை கவனிப்பதாக, தகவல் வெளியாகிஉள்ளது. மற்றொரு பக்கம் விஜயேந்திரா வின் பதவியை காப்பாற்ற, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் முயற்சிக்கின்றனர்.