உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கலெக்டர் பவுசியாவிடம் மன்னிப்பு பா.ஜ., கொறடா ரவிகுமார் அறிவிப்பு

கலெக்டர் பவுசியாவிடம் மன்னிப்பு பா.ஜ., கொறடா ரவிகுமார் அறிவிப்பு

பெங்களூரு: ''பாகிஸ்தானில் இருந்து வந்தவர் என்று விமர்சித்த விவகாரத்தில், கலபுரகி கலெக்டர் பவுசியா தரணத்திடம் மன்னிப்பு கேட்க தயார்,'' என, மேல்சபை பா.ஜ., கொறடா ரவிகுமார் அறிவித்துள்ளார்.கலபுரகியில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், மேல்சபை பா.ஜ., கொறடா ரவிகுமார் பேசும்போது, 'கலபுரகி கலெக்டர் பவுசியா தரணம், பாகிஸ்தானில் இருந்து வந்தவர்' என, சர்ச்சையாக கூறினார்.இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில் ரவிகுமார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவானது. வழக்கை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், ரவிகுமாருக்கு கண்டனம் தெரிவித்தது.கலெக்டர் பவுசியா தரணத்திடம் முதலில் மன்னிப்பு கேளுங்கள் என உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து ரவிகுமார் நேற்று அளித்த பேட்டியில், ''கலெக்டர் பவுசியா தரணம் பற்றி நான் கூறிய கருத்துக்கு, முன்பே வருத்தம் தெரிவித்துவிட்டேன். இப்போது அவரிடம் மன்னிப்பு கேட்கவும் தயாராக உள்ளேன். மன்னிப்பு கடிதம் எழுதி, என் வக்கீல் மூலம் அவரிடம் கொடுப்பேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை