உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரூ.589 கோடி கடன் வாங்கும் பி.எம்.டி.சி.,

ரூ.589 கோடி கடன் வாங்கும் பி.எம்.டி.சி.,

பெங்களூரு: நஷ்டத்தில் சிக்கித் தவிக்கும் பி.எம்.டி.சி.,க்கு, 589.20 கோடி ரூபாய் கடன் வழங்க, பஞ்சாப் நேஷனல் வங்கி முன்வந்துள்ளது. இதற்கு உத்தரவாதம் அளிக்க, அரசு முன்வந்துள்ளது.கர்நாடகாவின் நான்கு போக்குவரத்துக் கழகங்கள், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி வழங்க, எரிபொருள் பாக்கி தொகையை வழங்க முடியாமல் தத்தளிக்கின்றன. இதை கருத்தில் கொண்டு, நிதி நிறுவனங்களிடம் கடன் பெற, போக்குவரத்துக் கழகங்களுக்கு, மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. கடன் பெற வசதியாக, தானே உத்தரவாதம் அளிக்கவும் முன்வந்துள்ளது.இதன்படி, பி.எம்.டி.சி., 589.20 கோடி ரூபாய், கே.எஸ்.ஆர்.டி.சி., 623,80 கோடி ரூபாய், வட மேற்கு போக்குவரத்துக் கழகம் 646 கோடி ரூபாய், கல்யாண கர்நாடகா போக்குவரத்துக் கழகம் 141 கோடி ரூபாய் கடன் பெற அரசின் அனுமதி கிடைத்துள்ளது.தேசிய மற்றும் வர்த்தக வங்கிகளிடம் கடன் பெற, சில நிபந்தனைகள் விதித்து பி.எம்.டி.சி., டெண்டர் அழைத்தது.ஆண்டுக்கு 10 சதவீதம் வட்டியில், பி.எம்.டி.சி.,க்கு கடன் வழங்க, கனரா வங்கி முன் வந்தது. கனரா வங்கியை விட பஞ்சாப் நேஷனல் வங்கியில், வட்டி விகிதம் குறைவாக உள்ளது.எனவே இந்த வங்கியில், ஆண்டுக்கு 7.58 சதவீதம் வட்டியில் கடன் பெற, பி.எம்.டி.சி., முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி