உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மின்னல் தாக்கி தீப்பிடித்த பொலீரோ வாகனம்

மின்னல் தாக்கி தீப்பிடித்த பொலீரோ வாகனம்

ராய்ச்சூர் : தென்னை மரத்தில் மின்னல் தாக்கி தீப்பற்றியது. இந்த தீ, பொலீரோ வாகனத்துக்கும் பரவி முற்றிலும் எரிந்து நாசமானது.கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் ராய்ச்சூரில் கனமழை பெய்தது.தேவதுர்காவில் உள்ள சோமனமரடி கிராமத்தைச் சேர்ந்த ஹனுமந்தராய கஞ்சலிக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. நேற்று முன்தினம், இந்த வீட்டில் இருந்த தென்னை மரத்தில் மின்னல் தாக்கியது.தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. அப்போது வீசிய காற்றால், அருகில் இருந்த வைக்கோல் போர் மீதும் தீப்பொறிகள் விழுந்தன; வைக்கோல் போரும் எரிந்தது. மரத்தின் கீழ் நிறுத்தப்பட்டிருந்த ஹனுமந்தராய கஞ்சலிக்கு சொந்தமான பொலீரோ வாகனத்துக்கும் தீ பரவியது.வாகனத்தில் தீ, மளமளவென பரவியது. சிறிது நேரத்தில் வாகனம் முற்றிலும் எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை அணைத்தனர்.தேவதுர்கா போலீசார் விசாரிக்கின்றனர்.27_DMR_0001தீப்பற்றி எரிந்த பொலீரோ வாகனம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ