உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  வெடிகுண்டு மிரட்டல் நீதிமன்றங்களில் பரபரப்பு

 வெடிகுண்டு மிரட்டல் நீதிமன்றங்களில் பரபரப்பு

கலபுரகி: கலபுரகி, பெலகாவி மாவட்ட நீதிமன்றங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் வந்ததால், காலை வேளையில் இரு நீதிமன்றங்களிலும் பரபரப்பு ஏற்பட்டது. கலபுரகி, பெலகாவி மாவட்ட நீதிமன்றங்களின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு, அடையாளம் தெரியாத நபரிடமிருந்து மின்னஞ்சல் நேற்று அதிகாலை வந்தது. அதில், இரண்டு நீதிமன்றங்களின் வளாகங்களிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது. இது குறித்து, போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இரண்டு நீதிமன்றங்களுக்கும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழுவினர், மோப்ப நாயுடன் வந்தனர். நீதிமன்றங்களில் இருந்து நீதிபதி, வக்கீல், ஊழியர் என அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால், காலை வேளையில் இரண்டு நீதிமன்றங்களும் பரபரப்பாக காணப்பட்டது. வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தீவிர சோதனையில், நீதிமன்ற வளாகங்களில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. பின்னர், போலி மிரட்டல் என உறுதி செய்யப்பட்டது. மின்னஞ்சல் வந்த முகவரி குறித்து விசாரிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ