கவர்னர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
பெங்களூரு: கவர்னர் அலுவலகமான லோக் பவனுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பற்றி விசாரணை நடக்கிறது. கர்நாடகா கவர்னர் அலுவலகத்திற்கு கடந்த, 14 ம் தேதி இ - மெயிலில் வந்த குறுந்தகவலில், தமிழகத்தில் தி.மு.க., அமைச்சர்கள் மனைவியரின் அழுக்கு உடைகளை துவைக்கவும், பாத்திரங்களை கழுவவும் காவலர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதனால், பலர் மன அழுத்தத்தில் உள்ளனர். காவலர்களை காப்பாற்ற, 1979ல் நைனார் தாஸ் பரிந்துரை செய்தபடி, போலீசுக்கு யூனியன் கொண்டு வர வேண்டும். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் உங்கள் அலுவலகத்தில் நாங்கள் வைத்துள்ள மூன்று ஆர்.டி.எக்ஸ், குண்டுகள் தானாக வெடிக்கும். இல்லாவிட்டால் இலங்கையில் நடந்த போல மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் பரிசோதனை செய்த போது, வெடிகுண்டோ, சந்தேகம்படும்படியான பொருளோ கிடைக்கவில்லை. இதனால், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிந்தது. கவர்னர் அலுவலகம் அளித்த புகாரின்படி, விதான் சவு தா போலீசார் கடந்த, 21ம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.