உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / இஸ்ரேலிய துாதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இஸ்ரேலிய துாதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஹலசூரு: பெங்களூரில் உள்ள கர்நாடக உயர் நீதிமன்றம், இஸ்ரேலிய துாதரகம் ஆகியவற்றுக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பெங்களூரு, ஹலசூரு மர்பி டவுனில் இஸ்ரேலிய நாட்டின் துாதரகம் உள்ளது. இந்த துாதரகத்தின் மின்னஞ்சலுக்கு கடந்த மாதம் 22ம் தேதி 'சோ ராமசாமி@ ஹாட்மெயில்' என்ற முகவரியில் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. 'துாதரகத்தில் ஆறு ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டு வைத்துள்ளோம். தொழுகை நேரத்தில் குண்டு வெடிக்கும். விதான் சவுதா எதிரே உள்ள, கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது' என கூறப்பட்டு இருந்தது. இந்த மின்னஞ்சலை பார்த்து அதிர்ச்சி அடைந்த துாதரக அதிகாரிகள், ஹலசூரு, விதான் சவுதா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், துாதரகம், உயர் நீதிமன்றத்தில் சோதனை நடத்தினர். வெடிகுண்டோ, சந்தேகம்படும்படியான பொருளோ சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர். இது தொடர்பாக ஹலசூரு, விதான் சவுதா போலீஸ் நிலையங்களில் தனி தனி வழக்குப்பதிவாகி உள்ளது. இது நேற்று தாமதமாக வெளிச்சத்துக்கு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !