உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

 பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோரமங்களா: பெங்களூரு கோரமங்களா மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு, மின்னஞ்சலில் தமிழில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூரு கோரமங்களாவில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த அலுவலகத்திற்கு நேற்று காலை மின்னஞ்சல் ஒன்று வந்தது. தமிழில் எழுதப்பட்டி ருந்த மின்னஞ்சலில், 'பயங்கரவாதி கசாப்பை துாக்கிலிட்ட உங்களை மன்னித்து விடமாட்டோம். உங்கள் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. சிறிது நேரத்தில் வெடித்து விடும்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அதி காரிகள், உடனடியாக கோரமங்களா போலீசாருக்கும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுக்கும், மோப்ப நாய் குழுவினருக்கும் தகவல் தெ ரிவித்தனர். உடனடியாக வந்த அவர்கள், அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள், பொது மக்களை வெளியேற்றினர். அலுவலகத்திலும், அலுவலகம் அமைந்துள்ள கட்டடம் மற்றும் வளாகத்திலும் பல மணி நேரம் சோதனை நடத்தினர். சோதனையில் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் எதுவும் கண்டறியப்படாததால், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து, மீண்டும் பாஸ்போர்ட் அலுவலக பணிகள் துவங்கின. மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பிய நபர் குறித்தும், அதன், 'ஐ.பி.,' முகவரி குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை