உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / முதலை தாக்கி சிறுவன் காயம்

முதலை தாக்கி சிறுவன் காயம்

பல்லாரி: குளிப்பதற்காக ஆற்றில் இறங்கிய சிறுவனை, முதலை கடித்ததில் பலத்த காயங்களுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.பல்லாரி மாவட்டம், கம்ப்ளி தாலுகாவின், சனாபுரா கிராமத்தில் வசிப்பவர் வேதமூர்த்தி, 16. இவர் நேற்று காலை குளிப்பதற்காக கிராமத்தில் உள்ள ஆற்றுக்கு சென்றார். முதலை இருப்பதை கவனிக்காமல் நீரில் இறங்கினார்.குளித்து கொண்டிருந்த போது, திடீரென அங்கு வந்த முதலை, அவரை கவ்வியது. கை மற்றும் மார்பு பகுதியில் கடித்து காயப்படுத்தியது. அந்த வழியாக சென்ற வீரேஷ் என்ற இளைஞர், சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு உதவிக்கு வந்தார். அங்கிருந்த பெரிய கல்லை எடுத்து, முதலை மீது போட்டார். அது, சிறுவனை விட்டு விட்டு தண்ணீருக்குள் மறைந்தது.அதன்பின் சிறுவனை கம்ப்ளியின் தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். கூடுதல் சிகிச்சைக்காக, சிறுவன் கங்காவதியின் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !