உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஸ்ரீவேணுகோபால சுவாமி கோவிலில் பிரம்மோத்சவம்

 ஸ்ரீவேணுகோபால சுவாமி கோவிலில் பிரம்மோத்சவம்

தங்கவயல்: கம்மசந்திரா கிராமத்தில் உள்ள ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் பிரம்மோத்சவம் நேற்று விமரிசையாக நடந்தது. தங்கவயலில் கம்மசந்திரா கிராமத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோவிலில் நேற்று பிரம்ம ரத உத்சவம் நடந்தது. காலை 5:00 மணி முதலே அர்ச்சனை, யாக பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்யப்பட்டு மஹா மங்களாரத்தி காண்பிக்கப்பட்டது. பின், பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டது. பேண்டு வாத்தியம் முழங்க, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதம் நகர் வலம் வந்தது. பிரம்ம ரத உத்சவத்தை காண பல கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். ரதத்தில் எழுந்தருளிய வேணுகோபால சுவாமியை தரிசனம் செய்து, நேர்த்தி கடனை செலுத்தினர். உத்சவத்தை ஒட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை