உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சாலை விபத்தில் மணப்பெண் பலி

சாலை விபத்தில் மணப்பெண் பலி

ஷிவமொக்கா: ஷிவமொக்காவின், தும்மள்ளி கிராமத்தில் வசித்தவர் கவிதா, 27. இவர் ஷிவமொகா நகரில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். இவருக்கு இன்னும் 15 நாட்களில் திருமணம் நடக்க இருந்தது. இவர் நேற்று காலை, வழக்கம் போன்று தன் அண்ணனுடன், பைக்கில் பணிக்கு புறப்பட்டார். மலவகொப்பா சர்க்கரை ஆலை அருகில் சென்றபோது, எதிரே வந்த மற்றொரு பைக் மோதியது. இதில் கவிதா, நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த தனியார் பஸ் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ