உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  72 வார்டுகளுக்கு ரூ.4,342 கோடி பட்ஜெட்

 72 வார்டுகளுக்கு ரூ.4,342 கோடி பட்ஜெட்

 பெங்களூரு வடக்கு மாநகராட்சிக்கு உட்பட்ட பேட்ராயனபுரா, புலிகேசி நகர், சர்வக்ஞ நகர், ஹெப்பால், எலஹங்கா, ராஜராஜேஸ்வரி நகரின் சில பகுதிகள், தாசரஹள்ளி ஆகிய ஏழு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய, 72 வார்டுகளுக்கான பட்ஜெட்டை, தலைமை கமிஷனர் மகேஸ்வர் ராவ், கமிஷனர் பொம்மல சுனில் குமார் வெளியிட்டனர்.  மொத்தம் 4,342 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. வருவாய்:  2026 - 27ல் சொத்து வரியாக 826.25 கோடி ரூபாய் எதிர்பார்ப்பு  சொத்து வரி திருத்தம் மூலம் 30.87 கோடி ரூபாய் வருவாய் எதிர்பார்ப்பு  ஜி.ஐ.எஸ்., எனும் புவியியல் தகவல் அமைப்பு சார்ந்த, 'இ - கணக்கு' சொத்து வரி நடைமுறைப்படுத்தப்படும்  'பி பதிவில்' பதிவு செய்யப்பட்ட 'ஏ பட்டா'வாக மாற்றும் பணி நடந்து வருகின்றன. இதன் மூலம் 680 கோடி ரூபாய் வருவாய் எதிர்பார்ப்பு.  மாநகராட்சிக்கு உட்பட்ட சொத்துகள், டிஜிட்டல் மயமாக்கப்படும்  கணக்கு மாற்றங்களை தானியங்கி முறையில் மேற்கொள்ள உதவும் வகையில் 'இ - பட்டா' மென்பொருள் உருவாக்கப்பட்டு உள்ளது. நிதி, கணக்கு:  பெங்களூரு வடக்கு மாநகராட்சிக்கு உட்பட்ட நலத்திட்டங்களின் தகுதியான பயனாளிகள், நேரடியாக பயன் பெற மாற்றங்கள் திட்டமிடப்பட்டு உள்ளன.  தணிக்கை குறிப்புகளில் இருந்து எழும் ஆட்சேபனைகள், மீட்புகள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க, ஒரு தணிக்கை பிரிவு நிறுவப்படும்  15வது நிதி கமிஷனில் இருந்து 25 கோடி ரூபாயும்; 16வது நிதி கமிஷனில் இருந்து 128.29 கோடி ரூபாயும்; சிறப்பு அடிப்படை உள்கட்டமைப்பு நிதியாக 429.27 கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்ப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை