உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தொழிலதிபரை தாக்கி ரூ.1 கோடி கொள்ளை

 தொழிலதிபரை தாக்கி ரூ.1 கோடி கொள்ளை

மாதநாயக்கனஹள்ளி: பெங்களூரு ரூரல் மாதநாயக்கனஹள்ளியில் வசிப்பவர் சிவசங்கர். தொழிலதிபர். நேற்று முன்தினம் இரவு எலஹங்காவுக்கு காரில் சென்றார். நண்பரிடம் தொழிலுக்காக, 1.09 கோடி ரூபாய் வாங்கினார். பணத்தை காரில் எடுத்து கொண்டு வீட்டிற்கு வந்தார். தேசிய நெடுஞ்சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை, ஏழு பேர் கும்பல் மறித் து தாக்கினர். காரின் பின் இருக்கையில், சூட்கேசில் இருந்த, 1.09 கோடி ரூபாயை கொள்ளையடித்து விட்டு, இன்னொரு காரில் தப்பி சென்றனர். சிவசங்கர் அளித்த புகாரில், மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஏழு பேரையும் தேடுகின்றனர். சில மாதங்களுக்கு முன், இரிடியம் வாங்க முயன்று, ஒரு கும்பலிடம் லட்சக்கணக்கில் சிவசங்கர் பணம் இழந்திருந்தார். அதே கும்பலுக்கு, இந்த கொள்ளையில் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை