உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  இம்மாத இறுதிக்குள் அமைச்சரவை மாற்றம்

 இம்மாத இறுதிக்குள் அமைச்சரவை மாற்றம்

ஹூப்பள்ளி: ''இம்மாத இறுதிக்குள் அமைச்சரவை மாற்றம் நடக்கலாம்,'' என, காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.எல்.சி.,யுமான சலீம் அகமது கூறி உள்ளார். இது குறித்து, அவர் கூறியதாவது: முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் இருவரும் டில்லி செல்ல உள்ளனர். இவர்கள் டில்லி சென்று திரும்பிய பிறகே, மாநில அமைச்சரவையில் மாற்றம் நிகழும். இம்மாத இறுதிக்குள், கர்நாடகா மாநில அமைச்சரவையில் மாற்றம் நடக்கலாம். புதியவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என, கட்சி மேலிடத்தில் கோரிக்கை வைத்து உள்ளோம். இருப்பினும், அமைச்சரவை மாற்றம் நிச்சயம் நடக்கும். வாக்குறுதி திட்டங்களுக்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இதனால் தான், இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலுமே, காங்கிரஸ் வெற்றி பெற்றது. சிருங்கேரி தபால் ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்து உள்ளது. பா.ஜ., ஒரு மோசடி கட்சி. அவர்கள், வெற்றி பெற்றவரை, சதி செய்து தோற்கடித்து உள்ளனர். தமிழகத்தில், தி.மு.க.,வை ஆதரித்த காங்கிரஸ், தற்போது, த.வெ.க.,வை ஆதரிக்கிறது. இதனால், காங்கிரஸ் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதா ரமற் றவை. மேற்கு வங்கத்தில், 100 தொகுதிகளில், பா.ஜ., முறைகேடு செய்து வெற்றி பெற்றது. மம்தாவுக்கு பதவி ஆசையெல்லாம் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ