உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அமைச்சரவை மாற்றம் அவசியம் முதல்வர் சித்தராமையா பேட்டி 

 அமைச்சரவை மாற்றம் அவசியம் முதல்வர் சித்தராமையா பேட்டி 

மைசூரு: “மாநில நிர்வாக அமைப்புக்கு புத்துயிர் அளிக்க அமைச்சரவையில் மாற்றம் அவசியம்,'' என்று, முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து வரும் 20ம் தேதியுடன், மூன்று ஆண்டுகள் ஆகிறது. மூத்த எம்.எல்.ஏ.,க்கள் அமைச்சர் பதவியை எதிர்நோக்கி உள்ளனர். சிலர் டில்லி சென்று மேலிட தலை வர்களை சந்தித்து, அமைச்சர் பதவிக்காக லாபி நடத்துகின்றனர். சரியாக செயல்படாத அமைச்சர்களை நீக்கிவிட்டு, புதியவர்களை அமைச்சரவைக்கு கொண்டு வர வேண்டும் என்று, முதல்வர் சித்தராமையாவும் நினைக்கிறார். ஆனால், டில்லி சென்று மேலிட தலைவர்களை சந்தித்து விவாதிக்க, அவருக்கு நேரம் கிடைக்கவில்லை. இந்நிலையில், மைசூரில் நேற்று சித்தராமையா கூறியதாவது: மாநில நிர்வாக அமைப்புக்கு புத்துயிர் அளிக்க, அமைச்சரவையில் மாற்றம் அவசியம். கட்சி மேலிட தலைவர்கள் அழைத்ததும், டில்லி சென்று அமைச்சரவை மாற்றம் குறித்து விவாதிப்பேன். நாளை (இன்று) ஏதாவது மாற்றம் நடக்குமா என்று என்னிடம் ஏன் கேட்கிறீர்கள். எந்த மாற்றமும் இல்லை. 'நீட்' தேர்வை மத்திய அரசு சரியாக நடத்தவில்லை. தற்போது மாணவர்கள் எழுதிய தேர்வை ரத்து செய்து உள்ளனர். மாணவர்களின் எதிர்காலத்திற்கு யார் பொறுப்பு. கர்நாடகாவில் சி.இ.டி., எனும் பொது நுழைவு தேர்வை, எந்த பிரச்னையும் இன்றி நடத்தி முடித்து உள்ளோம். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை