உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பயங்கரவாதிகளை சகோதரர் என்று கூறிய சிவகுமாரை தலைவராக ஏற்க முடியுமா?

 பயங்கரவாதிகளை சகோதரர் என்று கூறிய சிவகுமாரை தலைவராக ஏற்க முடியுமா?

விஜயநகரா: “மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கு பயங்கரவாதிகளை, தங்கள் சகோதரர் என்று கூறிய, துணை முதல்வர் சிவகுமாரை, ஒக்கலிக சமூக தலைவராக எப்படி ஏற்க முடியும்?” என, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் கேள்வி எழுப்பி உள்ளார். விஜயநகராவின் ஹொஸ்கோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி: சித்தராமையா முதல்வர் பதவியில் நீடிப்பாரா, இல்லையா என்பது குறித்து, பெலகாவியில் குளிர்கால கூட்டத்தொடர் துவங்கும் முன்பு காங்கிரஸ் மேலிடம் தெளிவுபடுத்த வேண்டும். இல்லாவிட்டால் முதல்வர் பதவி விஷயத்தை பற்றி பேசியே, கூட்டத்தொடர் வீணடிக்கப்பட்டுவிடும். மாநில மக்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு, காங்கிரஸ் மேலிடம் முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டும். குளிர்கால கூட்டத்தொடரில் நீர்ப்பாசனம், பள்ளிகள் மூடல் தொடர்பான முக்கிய பிரச்னைகள் பற்றி விவாதிக்க, நாங்கள் தயாராகி வருகிறோம். கடந்த கூட்டத்தொடர்களில் வடமாவட்ட பிரச்னை பற்றி விவாதிக்க, கடைசி இரு நாட்கள் மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டது. இதற்கு மேலோட்டமாக பதில் அளித்து விட்டு அரசு தப்பித்தது. இம்முறை அப்படி நடக்க விட மாட்டோம். முதல் நாளில் இருந்தே வடமாவட்ட பிரச்னையை பற்றி பேசுவோம். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி செத்துப் போய்விட்டது. கட்சியின் சவப்பெட்டியை சுமக்கும் வேலையை, சித்தராமையா செய்கிறார். அவருக்கு பின், சவப்பெட்டியை யார் சுமப்பர் என்பது தான் இப்போது கேள்வி. துணை முதல்வர் சிவகுமார் ஒக்கலிக சமூக தலைவராக ஒருபோதும் நடந்து கொண்டது இல்லை. மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான பயங்கரவாதிகளை, தங்கள் சகோதரர் என்று அவர் கூறினார். அவரை நாங்கள் எப்படி ஒக்கலிகர் தலைவராக ஏற்க முடியும்? துங்கபத்ரா அணையில் இருந்து இரண்டாம் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கவில்லை. விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தலா 25,000 ரூபாய் இழப்பீடாக அரசு வழங்க வேண்டும். மக்காச்சோளம், கரும்பு விவசாயிகள் பிரச்னையை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசை கண்டித்து எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ