மேலும் செய்திகள்
அணைகளில் நீர்மட்டம் சரிவு; பாசன விவசாயிகள் கவலை
10-Apr-2025
பெங்களூரு: கர்நாடகாவில் அனைத்து மாவட்டங்களிலும், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக, அனைத்து அணைகளின் நீர்மட்டமும் இறங்குமுகமாக உள்ளது. மழைக்காலம் துவங்கும் வரை தண்ணீர் தேவை மற்றும் குடிநீர் வினியோகத்தை சமாளிக்க முடியுமா என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.சமாளிக்க முடியுமா?பெங்களூரு உட்பட, கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கிறது. அக்னி நட்சத்திரம் நடப்பதால், வெப்பம் மேலும் அதிகரிக்கிறது. வட மாவட்டங்களில் வெப்பநிலை 44 டிகிரி செல்ஷியஸை எட்டிஉள்ளது. பிரச்னை
காலை 8:00 மணிக்கே வெயில் தீயாக கொளுத்துகிறது. மக்கள் வெளியே தலை காட்ட முடியவில்லை.வெப்பத்தின் விளைவாக, முக்கிய அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. கடந்தாண்டுடன் ஒப்பிட்டால், இம்முறை அணைகளில் நீர் ஓரளவு அதிகம் உள்ளது என்றாலும், வெப்பத்தின் தாக்கத்தால் நீர்மட்டம் தொடர்ந்து குறைகிறது.இதுகுறித்து, நீர்ப்பாசன அதிகாரிகள் கூறியதாவது:கர்நாடகாவின் முக்கியமான 14 அணைகளில், தற்போது 277 டி.எம்.சி., தண்ணீர் இருப்புள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 193 டி.எம்.சி., தண்ணீர் இருந்தது. 14 அணைகளில் உள்ள தண்ணீர், மழைக்காலம் வரை போதுமானதாக இருக்கும். ஆனால், மழை பெய்வது தாமதமானால், பிரச்னை ஏற்படலாம்.தென் மேற்கு பருவமழை துவங்க, இன்னும் சில வாரங்கள் உள்ளன. கோடை மழை திருப்திகரமாக இருந்தது. ஆனால் ஏரிகள், அணைகளுக்கு எதிர்பார்த்த அளவு தண்ணீர் வரவில்லை. அவசியம் இல்லை
தற்போது வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கிறது. இதனால் நீர்மட்டம் மேலும் குறையும் வாய்ப்புள்ளது. நீர் மின் உற்பத்திக்கு பயன்படும் லிங்கனமக்கி, சூபா, வராஹி அணைகளில் 29 சதவீதம் தண்ணீர் இருப்புள்ளது.பெங்களூரு உட்பட, பழைய மைசூரு பகுதிகளுக்கு, குடிநீர் வழங்கும் ஹாரங்கி, ஹேமாவதி, கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய காவிரி நீர்ப்பாசன அணைகளில், 43 சதவீதம் தண்ணீர் இருப்புள்ளது. மழைக்காலம் வரை ஆதங்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என, நினைக்கிறோம்.நிர்ணயித்த காலத்தில் தென் மேற்கு பருவ மழை துவங்கும் என, வானிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி மழை பெய்தால் பிரச்னையை தவிர்க்கலாம். ஆனால், முந்தைய ஆண்டுகளை போன்று தாமதமானால், தற்போது அணைகளில் உள்ள நீர் குடிநீருக்கு போதாது. விவசாய பணிகளுக்கும் இடையூறு ஏற்படலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
10-Apr-2025