உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அன்னிய செலாவணி பாதுகாப்பு சட்டத்தில் நடிகை ரன்யா மீது வழக்கு

அன்னிய செலாவணி பாதுகாப்பு சட்டத்தில் நடிகை ரன்யா மீது வழக்கு

பெங்களூரு : துபாயில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில், சிறையில் உள்ள நடிகை ரன்யா ராவுக்கு மற்றொரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அன்னிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.கன்னட நடிகை ரன்யா ராவ், 33. துபாயில் இருந்து பெங்களூருக்கு 12 கோடி ரூபாய் தங்கம் கடத்திய வழக்கில், கடந்த மாதம் 3ம் தேதி டி.ஆர்.ஐ., எனும் வருவாய் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.தற்போது பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது ஜாமின் மீது மீதான விசாரணை, உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ரன்யாவும், அவரது நண்பர் தருணும் துபாயில் இருந்து குறைந்தபட்சம் 100 கிலோ தங்கம் கடத்தியதாக முந்தைய விசாரணையின்போது நீதிமன்றத்தில், டி.ஆர்.ஐ., தகவல் கொடுத்து இருந்தது.ஜாமின் கிடைத்து வெளியே வந்தால், ரன்யா மீண்டும் தங்கம் கடத்தலில் ஈடுபடுவார் என்று கருதிய டி.ஆர்.ஐ., 'காபிபோசா' எனும் அன்னிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய, மத்திய பொருளாதார புலனாய்வு அமைப்புக்கு பரிந்துரை செய்தது.இதை ஏற்றுக்கொண்ட புலனாய்வு அமைப்பு, ரன்யா மீது காபிபோசா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.இதற்கான ஆவணம், சிறை அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.காபிபோசா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ததால், ரன்யா ராவுக்கு ஓராண்டிற்கு ஜாமின் கிடைக்காது என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை