உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / போலி ஆவணம் தயாரித்ததாக பா.ஜ., செயலர் முனிராஜ் மீது வழக்கு

போலி ஆவணம் தயாரித்ததாக பா.ஜ., செயலர் முனிராஜ் மீது வழக்கு

சிக்கபல்லாபூர்: பாகேபள்ளி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுப்பாரெட்டி, வெளிநாடுகளில் சொத்து வாங்கி உள்ளார் என்று, போலி ஆவணம் தயாரித்ததாக, கர்நாடக பா.ஜ., செயலர் முனிராஜ் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.சிக்கபல்லாபூர் பாகேபள்ளி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுப்பாரெட்டி. இவரது வீடு, அலுவலகத்தில் கடந்த 10ம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.இதுகுறித்து சுப்பாரெட்டி கூறுகையில், ''வெளிநாட்டில் நான் சொத்து குவித்ததாக கிடைத்த தகவலில் என் வீட்டில், அமலாக்கத்துறை சோதனை நடத்தி உள்ளது. வெளிநாட்டில் எனக்கு சொத்து இல்லை. ''ராமசாமி வீரசாமி என்ற நபரிடம் இருந்து, வெளிநாட்டில் சொத்து வாங்கியதாக போலி ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன்,'' என கூறியிருந்தார்.இந்நிலையில் பாகேபள்ளி போலீஸ் நிலையத்தில், சுப்பாரெட்டி தரப்பில் அவரது உதவியாளர் நேற்று முன்தினம் அளித்த புகாரில், 'எம்.எல்.ஏ., சுப்பாரெட்டிக்கு வெளிநாடுகளில் வீடு, சொத்து இருப்பதாக, கர்நாடக பா.ஜ., செயலர் முனிராஜ் போலியான ஆவணங்களை தயாரித்து, 'வாட்ஸாப்' மூலம் பலருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் அடிப்படையில் சுப்பாரெட்டி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதன்மூலம் எம்.எல்.ஏ.,வின் பெயர், புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. போலி ஆவணம் தயாரித்த முனிராஜ் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டு இருந்தது.இந்த புகாரின் அடிப்படையில் பாகேபள்ளி போலீசார், முனிராஜ் மீது நேற்று வழக்குப்பதிவு செய்தனர். 2023 தேர்தலில் பாகேபள்ளி தொகுதியில், சுப்பாரெட்டிக்கு எதிராக போட்டியிட்டு, முனிராஜ் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.வேட்புமனுவில் பொய்யான தகவலை தெரிவித்து இருப்பதால், சுப்பாரெட்டியின் எம்.எல்.ஏ., பதவியை பறிக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் முனிராஜ் வழக்கு தொடர்ந்து உள்ளார். அதன் மீதும் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை