மேலும் செய்திகள்
78 வயது மூதாட்டி கொலை 4 வாலிபர்கள் அதிரடி கைது
30-Jul-2025
கலபுரகி: 'முஸ்லிம் பெண்களை ஹிந்து இளைஞர்கள் திருமணம் செய்து கொண்டால், அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என்று கூறிய பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட பசனகவுடா பாட்டீல் எத்னால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கலபுரகியை சேர்ந்த கவிசித்தப்பா நாயக், 27 என்ற வாலிபர், கொப்பால் மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் பெண்ணை காதலித்து வந்தார். அவரை இம்மாதம் 3ம் தேதி முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வெட்டி கொலை செய்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம், சட்டசபை கூட்டத் தொடரிலும் எதிரொலித்தது. இதற்கிடையில், கலபுரகியில் உள்ள கொலை செய்யப்பட்ட கவிசித்தப்பா நாயக்கின் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்ற, பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட பசனகவுடா பாட்டீல் எத்னால், அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். பின், வெளியே வந்த எத்னால், 'முஸ்லிம் பெண்களை திருமணம் செய்யும் இளைஞர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என்று தெரிவித்தார். இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. கலபுரகியின் கமார் காலனியை சேர்ந்த கமார் ஜுனைத் குரேசி, 'ரோசா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், 'எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னாலின் பேச்சு, இரு சமூகங்கள் இடையே அமைதியை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று புகார் அளித்திருந்தார். இதையடுத்து, எத்னால் மீது அமைதி, நல்லிணக்கத்தை சீர்குலைப்பது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
30-Jul-2025