உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மடாதிபதி குறித்து வதந்தி பரப்பியோர் மீது வழக்கு

 மடாதிபதி குறித்து வதந்தி பரப்பியோர் மீது வழக்கு

கொப்பால்: மைசூரு தசராவை துவக்கி வைக்கும் அழைப்பை கவி மடத்தின் மடாதிபதி நிராகரித்ததாக பொய் பிரசாரம் செய்தவர்கள் மீது போலீசில் வழக்கு பதிவாகி உள்ளது. நடப்பாண்டு மைசூரு தசராவை, கொப்பாலில் உள்ள கவி மடத்தின் மடாதிபதி ஸ்ரீ அபிநவ கவிசித்தேஸ்வர சுவாமிகள் துவக்கி வைப்பார் என்று முதல்வர் சிவகுமார் அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் 'மைசூரு தசரா துவக்க விழாவை கவி மடத்தின் மடாதிபதி நிராகரித்துவிட்டார்' என்ற செய்தி வேகமாக பரவியது. இது தொடர்பாக எம்.எல்.ஏ., ராகவேந்திர ஹிட்னால், 'கவி சித்தேஸ்வர சுவாமிகள், தசராவை துவக்கி வைக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். அவர் சம்மதம் தெரிவித்த பின்னரே, முதல்வர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்' என்றார். இந்நிலையில், கொப்பால் நகர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுரேஷ், தாமாக முன்வந்து, சமூக வலைதளத்தில் பொய் செய்தி பரப்பியவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்