உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிமென்ட் ஸ்லாப் விழுந்து பலி மூவர் மீது வழக்கு

சிமென்ட் ஸ்லாப் விழுந்து பலி மூவர் மீது வழக்கு

கோகிலு: மெட்ரோ -சிமென்ட் ஸ்லாப் விழுந்து ஆட்டோ ஓட்டுநர் பலியான சம்பவத்தில், மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.பெங்களூரு எலஹங்கா அருகில் கோகிலு என்ற இடத்தில், ஆட்டோவில் பயணித்த பயணியரை, ஆட்டோ ஓட்டுனர் காசிம் சாப், இறக்கி விட்டார். அப்போது அவ்வழியாக மெட்ரோ சிமென்ட் ஸ்லாப் எடுத்த வந்த லாரி, யு டர்ன் அடிக்கும் போது, ஆட்டோ மீது சிமென்ட் ஸ்லாப் விழுந்தது.இதில், ஆட்டோ ஓட்டுநர் காசிம் சாப் சம்பவ இடத்தில் ஆட்டோவுடன் உடல் நசுங்கி உயிரிழந்தார். அவரின் மாமனார் சையது காதர் புகார் அளித்தார். எலஹங்கா போக்குவரத்து போலீசார், நாகார்ஜுனா கன்ஸ்டிரக் ஷன் நிறுவன மேலாளர், லாரி ஓட்டுநர், ஒப்பந்ததாரர் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி