உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பஸ் ஓட்டுநருக்கு செருப்படி; பெண் மீது வழக்கு

பஸ் ஓட்டுநருக்கு செருப்படி; பெண் மீது வழக்கு

பெங்களூரு: பெங்களூரின், டின் பேக்டரியில் இருந்து, எலக்ட்ரானிக் சிட்டியை நோக்கி, இம்மாதம் 11ம் தேதியன்று, காலை 8:40 மணிக்கு கேஏ57, எப் 0836 எண் கொண்ட பி.எம்.டி.சி., பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றும் காவ்யா என்ற பெண் உட்பட ஏராளமான பயணியர் இருந்தனர்.சர்ஜாபுரா சாலையின், கைகொண்டனஹள்ளி அருகில், எலக்ட்ரானிக் சிட்டி சாலையில் சென்றபோது, தன் அலுவலகம் அருகில் பஸ்சை நிறுத்தும்படி, காவ்யா கூறினார். ஆனால் வாகன போக்குவரத்து நெருக்கடி அதிகம் இருந்ததால், ஓட்டுநர் அதஹர் ஹுசேன், 42, பஸ்சை நிறுத்தவில்லை.கோபமடைந்த காவ்யா கத்தி, கூச்சலிட்டார். தகாத வார்த்தைகளால் திட்டினார். அது மட்டுமின்றி செருப்பை கழற்றி, ஓட்டுநரை தாக்கினார். இதை சக பயணியர் கண்டித்தனர்.ஓட்டுநர் அதஹர் ஹுசே அளித்த புகாரின் பேரில் காவ்யா மீது பெல்லந்துார் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ