ரயில்வே பணியாளர் 4 பேர் மீது பாலியல் புகாரில் வழக்கு பதிவு
மைசூரு: ரயில்வே பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர், அவருக்கு உடந்தையாக இருந்த பெண் அதிகாரி உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.தென்மேற்கு ரயில்வேயின் மைசூரு பிரிவில் உள்ள ரயில்வே ஒர்க் ஷாப்பில், பணியாற்றி வரும் 30 வயது பெண் ஊழியர், அசோகபுரம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார்:என்னுடன் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர் தாமஸ், மிகவும் ஆபாசமாக பேசுவது மட்டுமின்றி, ஆபாச படங்களையும் காண்பிப்பார். அவரின் செயலுக்கு சுஜித், கீதேஷ் சிங், ஒரு முதன்மை பெண் பொறியாளர் ஆதரவு கொடுக்கின்றனர்.இது தொடர்பாக எங்கள் அலுவலகத்தில், கடந்தாண்டு ஆகஸ்டில் புகார் அளிக்கப்பட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.கீதேஷ், சுஜித் ஆகிய இருவரும் எனக்கு தெரியாமல், என்னை மொபைல் போனில் படமும், வீடியோவும் எடுத்து, அதை தாமசுக்கு அனுப்பி உள்ளனர். இதை அறிந்த நான், மன உளைச்சலால் அவதிப்பட்டேன். ஊழியர் கீதேஷ், பீஹாரில் இருந்து ஆட்களை வரவழைத்து, என்னை சுட்டு கொன்று விடுவதாக மிரட்டினார். இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.புகாரின்படி, நான்கு பேர் மீதும் வழக்கு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.