உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கமேனி மறைவுக்கு போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு

 கமேனி மறைவுக்கு போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு

பெங்களூரு: ''ஈரானில் உச்ச தலைவர் கமேனி மரணத்தை தொடர்ந்து, பெங்களூரில் நடந்த போராட்டங்கள் தொடர்பாக, வழக் குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன,'' என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: ஒரு சிறுபான்மையினர் குழு மக்கள், கமேனியை, தங்கள் குருவாக கருதினர். அவரின் மறைவால் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதை நல்ல முறையில் எடுத்துரைத்திருக்கலாம். அதுவும் நம் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு நடந்திருக்க வேண்டும். போராட்டம் நடத்த அனுமதி கேட்கவும் இல்லை, அவர்களுக்கு அனுமதியும் வழங்கவில்லை. போலீசார் ஏற்கனவே அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். வரும் நாட்களில் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது. நீதிமன்ற உத்தரவை அனைவரும் மதிக்க வேண்டும். சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்த மட்டுமே நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. அதை நாங்கள் கடைபிடிக்கிறோம். காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத போதும் கூட, சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்தி உள்ளோம். கர்நாடக மாநில காங்கிரசை தொடர்ந்து ஆறு ஆண்டுகள் நடத்துவது சுலபமான காரியம் அல்ல. நானும் தலைவராக இருந்துள்ளேன். சிவகுமார், நீண்ட நாட்களாக தலைவராக உள்ளார். அனைவரின் ஒத்துழைப்பு இல்லாமல் கட்சியை நடத்த முடியாது. என்னையும் இரவு விருந்துக்கு அழைத்துள்ளார். இதில் எந்த தவறும் இல்லை. வெளிநாடு சென்று வந்த எம்.எல்.ஏ.,க்களிடம் என்ன கற்றுக் கொண்டனர் என்பதை அவர்களிடம், நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். என்னிடம் கேட்டால், யூகத்தின் அடி ப்படையில் தான் பதில் வரும். அவர்களிடம் கேட்டால் தெளிவாக விளக்குவர். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ