உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தினமும் 3 லட்சம் வீடுகளில் பெங்களூரில் ஜாதிவாரி சர்வே

தினமும் 3 லட்சம் வீடுகளில் பெங்களூரில் ஜாதிவாரி சர்வே

பெங்களூரு : பெங்களூரில் ஒரு நாளைக்கு 3 லட்சம் வீடுகளில் ஜாதிவாரி சர்வே நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில், செப்டம்பர் 22ல் துவங்கிய ஜாதிவாரி சர்வே அக்டோபர் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் மட்டும் 19ம் தேதி வரை சர்வே நடக்கும். சர்வே பணிகள் குறித்து, ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் கூறியதாவது: ஜி.பி.ஏ., வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளில் ஜாதிவாரி சர்வேயில் ஈடுபடுவோருக்கு, ஒரு நாளைக்கு 200 ரூபாய் பயண செலவுக்காக வழங்கப்படுகிறது. சர்வேயில் பங்கேற்காத ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சர்வேயின்போது அனைவரும் தங்கள் ஆதார் கார்டுகளை காட்ட வேண்டும். வாக்காளர் அடையாள அட்டையை காட்ட வேண்டும் என்ற அவசியமில்லை. முதல்வர் அறிவுறுத்தலின்படி சர்வேயை விரைவில் முடிக்க வேண்டும். முன்னேற்றம் குறித்து தினமும் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. பெங்களூரில் ஒரு நாளைக்கு 3 லட்சம் வீடுகளில் சர்வே நடத்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சர்வே எடுக்கும் பணியில், உடல் நலம் சரியில்லாதவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும். பெங்களூரில் 46 லட்சம் வீடுகள் உள்ளன. இதில், 4.13 லட்சம் வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. சர்வே பணிகளை விரைந்து முடிக்க ஆசைப்பட்டு, தவறான தகவல்கள் வழங்கும் ஊழியர்களின் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை