உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஜன.,1 முதல் ஆறு ரயில்களின் எண்கள் மாற்றம்

ஜன.,1 முதல் ஆறு ரயில்களின் எண்கள் மாற்றம்

பெங்களூரு: ‘ஜனவரி 1ம் தேதி முதல் ஆறு ரயில்களுக்கு புதிய எண்கள் கொடுக்கப்பட்டு உள்ளது’ என தென்மேற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:  ரயில் எண் 20623 அசோகபுரம் – கே.எஸ்.ஆர்., பெங்களூரு மால்குடி தினசரி ரயில் மற்றும் எண் 20624 கே.எஸ்.ஆர்., பெங்களூரு – அசோகபுரம் மால்குடி தினசரி ரயில்கள், 2027 ஜன., 1 முதல் முறையே, 16123 மற்றும் 16124 ஆக மாற்றப்படுகிறது.  எண் 22617 திருப்பதி – எஸ்.எம்.வி.டி., பெங்களூரு; எண் 22618 எஸ்.எம்.வி.டி., பெங்களூரு – திருப்பதி வாரம் மூன்று நாட்கள் இயங்கும் ரயில்கள், 2027 ஜன., 1 ம் தேதி முதல் முறையே 16627 மற்றும், 16628 ஆக மாற்றப்படுகிறது.  எண் 12201 லோகமான்ய திலக் முனையம் – திருவனந்தபுரம்; எண் 12202 – திருவனந்தபுரம் – லோகமான்ய திலக் முனையம் வாரத்தில் இரண்டு நாட்கள் இயங்கும் காரிப் ரத் விரைவு ரயில்கள், 2027 ஜன., 1ம் தேதி முதல் முறையே 16371 மற்றும் 16372 எண் ஆக மாற்றப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !