உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரவுடி சிவகுமார் கொலை வழக்கு சி.ஐ.டி., விசாரணை துவக்கம் 

ரவுடி சிவகுமார் கொலை வழக்கு சி.ஐ.டி., விசாரணை துவக்கம் 

பாரதிநகர் : பார திநகர் ரவுடி சிவகுமார் கொலை வழக்கில், சி.ஐ.டி., விசாரணை நேற்று முதல் துவங்கியது. கொலை நடந்த இடத்திற்கு நேரில் சென்று, சி.ஐ.டி., கூடுதல் டி.ஜி.பி., பி.கே.சிங் ஆய்வு செய்தார். பெங்களூரு பாரதிநகரை சேர்ந்தவர் சிவகுமார், 44. ரவுடி. கடந்த 15ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். முதல் குற்றவாளியான ஜெகதீஷ் துபாய் தப்பினார். கே.ஆர்.புரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜும் விசாரணை வளையத்திற்கு கொண்டு வரப்பட்டார். இந்த கொலை வழக்கை சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு ஒப்படைத்தது. நேற்று முன்தினம் இரவு பாரதிநகர் போலீஸ் நிலையத்திற்கு சென்ற, சி.ஐ.டி., - டி.எஸ்.பி., உமேஷ், இதுவரை நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான தகவல்களை, விசாரணை அதிகாரி பிரகாஷ் ரத்தோட்டிடம் பெற்று கொண்டார். நேற்று முதல் சி.ஐ.டி., விசாரணை அதிகாரபூர்வமாக துவங்கியது. கொலை நடந்த இடத்தில் சி.ஐ.டி., கூடுதல் டி.ஜி.பி., - பி.கே.சிங், எஸ்.பி., வெங்கடேஷ், டி.எஸ்.பி., உமேஷ் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். பாரதிநகர் இன்ஸ்பெக்டர் பைரோஸ், புலிகேசிநகர் ஏ.சி.பி., கீதாவிடம் இருந்தும் தகவல் பெற்று கொண்டனர். வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் 16 பேரையும், தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க இன்று நீதிமன்றத்தில் மனு செய்ய உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை