உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மண் விநாயகர் சிலைகள் ஈஸ்வர் கண்ட்ரே கோரிக்கை

மண் விநாயகர் சிலைகள் ஈஸ்வர் கண்ட்ரே கோரிக்கை

பீதர் : ''மக்களால் பூஜிக்கப்ப டும் விநாயகர் சதுர்த்தியில் சாயம் பூசப்படாத மண் சிலைகளை வைத்து பூஜியுங்கள்,'' என, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே வேண்டுகோள் விடுத்துள்ளார். பீதரில் நேற்று அவர் அளி த்த பேட்டி: முந்தைய காலத்தில் விநாயகர் சதுர்த்தி நாளன்று, தங்கத்தால், வெள்ளியால் அல்லது மண்ணால் தயாரிக்கப்பட்ட சிலைகளை பூஜிப்பது சம்பிரதாயம். சமீப ஆண்டுகளாக, நீரில் கரையாத பி.ஓ.பி., எனும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் அபாயமான ரசாயன சாயம் பூசப்பட்ட சிலைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதை நீரில் கரைப்பதால், நீர்வாழ் உயிரினங்கள், ஆடு, மாடுகள், விலங்குகள், பறவைகளின் இறப்புக்கு காரணமாகின்றன. மாநிலத்தின் ஆறுகள், ஏரிகள், கிணறு உட்பட எந்த நீர் நிலைகளிலும் பி.ஓ.பி., சிலைகள் கரைப்பதற்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. பொறுப்புள்ள குடிமக்களாக, களிமண் சிலைகளை மட்டுமே பூஜிக்க வேண்டும். பி.ஓ.பி., விநாயகர் சிலைகள் சல்பேட், ஹெமிஹைட்ரேட் உட்பட, பல ரசாயனம் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. பண்டிகை நேரத்தில் எந்த சமுதாயத்தின், ஆன்மிக உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் அரசுக்கு இல்லை. ஆனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத சிலைகளை பயன்படுத்துங்கள். பி.ஓ.பி., சிலைகளை தயாரிப்பது, விற்பனை, கரைப்பதை தடை செய்து, 2023ன் செப்டம்பர் 15ல் அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை பின்பற்றும்படி, கர்நாடக உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டது. இதன்படி மக்கள் நடந்து கொண்டு, மண் விநாயகர் சிலை வைத்து பூஜியுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ