உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மலிவு விலை மருந்தகம் மூடல்? கோலாரில் பா.ஜ., போராட்டம்!

மலிவு விலை மருந்தகம் மூடல்? கோலாரில் பா.ஜ., போராட்டம்!

கோலார் : பிரதமரின் மலிவு விலை மருந்தகங்களை மூடும் மாநில அரசின் திட்டத்தை கண்டித்து, கோலார் மாவட்ட பா.ஜ., சார்பில், கோலாரின் அரசு மருத்துவமனை அருகில் போராட்டம் நடத்தப்பட்டது.மாவட்ட பா.ஜ., தலைவர் ஓம் சக்தி சலபதி பேசியதாவது:கர்நாடகாவில் 1,541 மலிவு விலை மருந்தகங்கள் உள்ளன. இதன் மூலம் மாதம் தோறும் 4 முதல் 5 லட்சம் மக்கள் பயன் பெற்று வருகின்றனர். இம்மாநிலத்தில் ஆட்சி செய்யும் காங்கிரஸ், பெண்களுக்கு இலவச பஸ் திட்டம் அறிவித்தனர். ஆனால் பஸ்கள் எண்ணிக்கையை குறைத்து விட்டனர். மின்சார கட்டணம், பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி உள்ளனர்.விவசாயிகள் பத்திரப்பதிவு கட்டணம் ஏறியுள்ளது. எல்லா துறைகளிலுமே மாபியா கும்பல்களின் தலையீடு அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.மருந்து மாபியா வலியுறுத்தலின் பெயரில் மலிவு விலை மருந்தகங்களை மூடுவதற்கு திட்டமிட்டு உள்ளனர். இது கண்டனத்துக்குரியது. டில்லியில் நடந்த 'நிடி அயோக்' கூட்டத்தில், முதல்வர் சித்தராமையா கலந்து கொள்ளவில்லை.ஆனால் மெகா விருந்து சாப்பிடுவதற்காக ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். அவருக்கு மாநில வளர்ச்சி பற்றி சிறிதும் கவலையில்லை. இவ்வாறு அவர் பேசினார்.கோலார் தாலுகா பா.ஜ., தலைவர் சி.டி.ராமசந்திர கவுடா, எஸ்.பி. முனி வெங்கடப்பா, விஜயகுமார், சா.மா.பாபு, கம்போடி நாராயண சாமி, திம்மராயப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி