உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மக்கள் எதிர்பார்ப்புக்கு தக்கபடி பணியாற்றுங்கள் பெங்., எம்.எல்.ஏ.,க்களுக்கு முதல்வர் உத்தரவு

மக்கள் எதிர்பார்ப்புக்கு தக்கபடி பணியாற்றுங்கள் பெங்., எம்.எல்.ஏ.,க்களுக்கு முதல்வர் உத்தரவு

பெங்களூரு:“ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கவுன்சிலர்கள் இல்லாததால், நகரை மேம்படுத்தி மக்களின் மனதில் இடம் பிடிப்பதுடன், அரசுக்கும் நல்ல பெயர் கிடைக்க செய்யுங்கள்,” என, காங்., அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ.,க்களுக்கும், முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். கிரேட்டர் பெங்களூரு ஆணையம், புதிதாக உருவெடுத்துள்ளது. அது ஐந்து மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு இறுதிக்குள் மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி, ஜி.பி.ஏ.,வை மாநில அரசு அமைத்து ஐந்து மாநகராட்சிகளாக பிரித்துள்ளது. இதனால் மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் கவுன்சிலர்கள் இல்லாததால், மேம்பாட்டுப் பணிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வரும் மாநகராட்சித் தேர்தலில் ஐந்து மாநகராட்சிகளையும் காங்கிரஸ் வசமாகும் வகையில் பணியாற்றும்படி, ஐந்து மாநகராட்சிகளின் பொறுப்பு அமைச்சர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மாநகராட்சி தேர்தலை கருத்தில் கொண்டு, பெங்களூரின் மாநில அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன் முதல்வர் சித்தராமையா நேற்று முன் தினம் ஆலோசனை நடத்தினார். விதான்சவுதா கமிட்டி அறையில் நடந்த இந்த கூட்டத்தில், நகரை மேம்படுத்துவது குறித்து, பல ஆலோசனைகள் வழங்கினார். அவர் பேசியதாவது: எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு நடுவே, பெங்களூரின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு, மாநில அரசு ஜி.பி.ஏ., அமைத்து, ஐந்து மாநகராட்சிகளாக பிரித்துள்ளது. இதன் மீது மக்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்பின்படி, நீங்கள் பணியாற்ற வேண்டும். தற்போது மாநகராட்சிகளில், மக்கள் பிரதிநிதிகள் இல்லை. மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில், உங்களின் பங்களிப்பு அதிகம். மக்களின் விருப்பப்படி பணியாற்றுங்கள். நீங்கள் சிறப்பாக பணியாற்றினால், அரசுக்கும் நல்ல பெயர் கிடைக்கும். மாநகராட்சிகள் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற, உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை