உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வாக்குறுதி திட்டங்களுக்கு ரூ.75,000 கோடி திவால் ஆகவில்லை என முதல்வர் பெருமிதம்

வாக்குறுதி திட்டங்களுக்கு ரூ.75,000 கோடி திவால் ஆகவில்லை என முதல்வர் பெருமிதம்

பெங்களூரு:''வாக்குறுதித் திட்டங்களுக்கு, நடப்பாண்டு பிப்ரவரி இறுதி வரை, 75,509 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. ஆனாலும் அரசு திவால் ஆகவில்லை,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, முதல்வர் சித்தராமையா கூறியதாவது:கடந்த 2023 ஜூன் 11ல், 'சக்தி' திட்டம் துவக்கப்பட்ட பின், அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர். இதுவரை 410 கோடி பெண்கள் பயணம் செய்துள்ளனர். 2024 - 25ம் ஆண்டில், வாக்குறுதித் திட்டங்களுக்கு 52,900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பிப்ரவரி இறுதி வரை 41,650 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.'கிரஹ லட்சுமி' திட்டத்துக்கு, 28,608 ரூபாய் ஒதுக்கி, 22,611 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. 'கிரஹ ஜோதி' திட்டத்துக்கு 9,657 கோடி ரூபாய் ஒதுக்கி 8,389 கோடி ரூபாயும்; 'அன்னபாக்யா' திட்டத்துக்கு, 8,079 கோடி ரூபாய் ஒதுக்கி, 5,590 கோடி ரூபாயும்; 'சக்தி' திட்டத்துக்கு 5,015 கோடி ரூபாய் ஒதுக்கி, 4,021 கோடி ரூபாயும்; 'யுவநிதி' திட்டத்துக்கு 650 கோடி ரூபாய் ஒதுக்கி, 240 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.அன்னபாக்யா, கிரஹ லட்சுமி திட்டத்தின் கீழ், 1.26 கோடி குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன. கிரஹ ஜோதியில் 1.62 கோடி குடும்பங்கள் இலவச மின்சாரம் பெறுகின்றன.வாக்குறுதித் திட்டங்களுக்காக, நடப்பாண்டு பிப்ரவரி இறுதி வரை, 75,509 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. ஆனாலும் அரசு திவால் ஆகவில்லை. அடுத்த ஐந்து ஆண்டுகள் வரை, திட்டங்கள் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ