உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றால் ரூ.6 கோடி முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றால் ரூ.6 கோடி முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

மைசூரு: “அடுத்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பதக்கம் வெல்லும் கர்நாடக வீரர், வீராங்கனையருக்கு, 6 கோடி ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படும்,” என, முதல்வர் சித்தராமையா அறிவித்தார். மைசூரு சாமுண்டி விஹார் மைதானத்தில், 'சி.எம். கப்' விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: இப்போட்டியில் பங்கேற்க, மாநிலத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் வந்துள்ள 3,600க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனையருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். விளையாட்டுகளில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். வெற்றியை கண்டு அகங்காரம் கொள்ளாமல், தோல்வியை கண்டு து வண்டு விடாமல் இருக்க வேண்டும். இவற்றை விட விளையாட்டுத் திறனை வளர்ப்பது தான் முக்கியம். மல்யுத்தம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விளையாட்டாக கருதப்பட்ட காலத்தில், சமூக தடைகள், பின்னடைவுகளை எதிர்கொண்டபோதும், சர்வதேச அளவில் வினேஷ் போகட் சாதனை படைத்தார். சர்வதேச அளவிலான தடகள வீராங்கனையாக இருந்த அவர், தற்போது ஹரியானா மாநிலத்தில் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். மாநில விளையாட்டு வீரர்களுக்கு, அரசு அனைத்து விதமான ஒத்துழைப்புகளையும் வழங்கி வருகிறது. மாநிலத்தின் மிகவும் திறமையான விளையாட்டு வீரர்கள் 60 பேருக்கு, அடுத்த ஒலிம்பிக்கில் பங்கேற்க பயிற்சி பெறுவதற்காக, ஆண்டுதோறும் 10 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு 6 கோடி ரூபாய் ரொக்க பரிசு வழங்க அரசு முன்வந்துள்ளது. வி ளையாட்டு வீரர்களுக்கு அனைத்து துறைகளிலும் 2 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. போலீஸ் துறையில் மட்டும் 2 முதல் 3 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்றைய இளைஞர்கள் கல்வி, விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். இது உடல், மன வளர்ச்சிக்கு உதவும். விளையாட்டு, உடற்பயிற்சி, நல்ல ஆரோக்கியத்துக்கு அவசியமானதாகும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை