உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கடலில் விழுந்த மீனவருக்கு உதவிய கடலோர காவல் படை

கடலில் விழுந்த மீனவருக்கு உதவிய கடலோர காவல் படை

மங்களூரு: கடலில் விழுந்து அபாயத்தில் சிக்கிய மீனவரை, இந்திய கடலோர காவல் படையினர் காப்பாற்றினர். தட்சிணகன்னடா மாவட்டம், மங்களூரில் இருந்து, 100 கி.மீ., தொலைவில், ‘சிவசாகர்’ என்ற படகில், நேற்று முன்தினம் இரவு, மீனவர்கள் மீன் பிடித்து கொண் டிருந்தனர். மீன்கள் வலையில் சிக்கியதால் கொமரா ராமு என்பவர், வலையை இழுத்தார். அப்போது நிலை தடுமாறி கடலில் விழுந்தார். அவரை படகில் இருந்த சக மீனவர்கள் காப்பாற்றினர். ஆனால் அதிகமான கடல் நீரை குடித்திருந்ததால், அபாயமான நிலையில் இருந்தார். அவசர சிகிச்சை தேவைப்பட்டது. எனவே, இந்திய கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுத்தனர். கடலோர காவல் படையினர், தாமதிக்காமல் ஐ.சி.ஜி.எஸ்.சி., – 448 கப்பலை, அனுப்பி வைத்தனர். இரவு நேரம் இருள் சூழ்ந்திருந்த நிலையிலும், ஐ.சி.ஜி.எஸ்.சி., – 448 கப்பல், 'சிவசாகர்' படகு இருக்கும் இடத்தை கண்டுபிடித்தது. கடலோ காவல் படை கப்பில் இருந்த டாக்டர்கள், மயக்கமாக இருந்த கொமரா ராமுவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, நவ மங்களூரு துறைமுகத்துக்கு அழைத்து வந்து, மருத்துவமனையில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை