உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஹோட்டல் தோசையில் கரப்பான் பூச்சி

ஹோட்டல் தோசையில் கரப்பான் பூச்சி

பெங்களூரு: ஹோட்டலில் தோசையில் கிடந்த கரப்பான் பூச்சியால், வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். பெங்களூரு மல்லேஸ்வரத்தில், சி.டி.ஆர்., எனும் ஹோட்டல் உள்ளது. மிகவும் பிரபலமான ஹோட்டலான இங்கு தயாரிக்கப்படும், தோசைக்கு என ரசிகர் பட்டாளமே உள்ளது. நீண்ட வரிசையில் காத்து நின்று, தோசை சாப்பிட்டு செல்வர். இந்நிலையில் அந்த ஹோட்டலில் பெண் ஒருவர் சாப்பிட்ட மசால் தோசையில், கரப்பான் பூச்சி இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், ஹோட்டல் ஊழியர்களை அழைத்து புகார் கூறியும் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தனர். தோசையில் கரப்பான் பூச்சி இருந்ததை, அந்த பெண் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். ஹோட்டல் ஊழியர்கள் அலட்சியத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை