மேலும் செய்திகள்
செட்டிநாட்டு வடகறி
09-May-2026
- நமது நிருபர் - வீட்டில் மதிய சாப்பாட்டிற்கு சிம்பிளாக ஒரே சாதம் செய்ய நினைக்கிறீர்களா... அதுவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது போன்று சாதம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், வீட்டில் தேங்காயும், பீட்ரூட்டும் இருந்தாலே போதும். இரண்டையும் வைத்து சூப்பரான தேங்காய் பீட்ரூட் சாதம் செய்து விடலாம். தேவையான பொருட்கள் l இரண்டு பீட்ரூட் l ஒரு கப் தேங்காய் l அரை டீஸ்பூன் கடுகு, உளுந்தம் பருப்பு l ஒரு டீஸ்பூன் கடலை பருப்பு l வேர்க்கடலை போதுமான அளவு l ஐந்து முந்திரி l இரண்டு பச்சை மிளகாய் l ஒரு கொத்து கறிவேப்பிலை l அரை டீஸ்பூன் மஞ்சள் துாள் l உப்பு தேவையான அளவு l இரண்டு கப் வடித்த சாதம் l கொத்தமல்லி இலை சிறிதளவு செய்முறை பீட்ரூட், தேங்காய் துண்டு, துண்டாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து சற்று, கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள். அடுப்பை ஆன் செய்து வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, முந்திரி, வேர்க்கடலை சேர்த்து வறுத்து நன்கு பொரிந்ததும், கொரகொரப்பாக அரைத்து வைத்திருக்கும், பீட்ரூட், தேங்காய் துண்டுடன் சேர்க்க வேண்டும். இதனுடன் மஞ்சள் துாள், உப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பின், வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து கலந்து, இரண்டு நிமிடங்கள் கழித்து, கொத்தமல்லி இலை துாவி இறக்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான தேங்காய் பீட்ரூட் சாதம் தயார். இதுவரை தேங்காய் சாதம், தேங்காய் பால் சாதம் சாப்பிட்டு இருப்போம். சற்று வித்தியாசமாக இந்த சாதத்தை ரெடி செய்து பார்க்கலாமே. தேங்காய் பீட்ரூட் சாதத்திற்கு அப்பளம், உருளைகிழங்கு வறுவலை சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம்!
09-May-2026