கல்லுாரி
பெங்களூரு:  கல்லுாரி மாணவி தற்கொலை
மைசூரு மாவட்டம், எச்.டி.கோட்டேயின் ஹெப்பலகுப்பே கிராமத்தை சேர்ந்தவர் பாவனா, 21. ரமாபாய் அம்பேத்கர் மகளிர் விடுதியில் தங்கி, பெங்களூரு பல்கலைக் கழகத்தில் கன்னட துறையில் இரண்டாம் ஆண்டு முதுகலை படித்து வந்தார்.நேற்று மதியம் 12:00 மணி அளவில் அறையில் பாவனா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் 'நான் நம்பிய நண்பர், என்னை ஏமாற்றிவிட்டார். என்னை மன்னித்து விடுங்கள் அப்பா, அம்மா' என்று குறிப்பிட்டிருந்தார்.ஞானபாரதி போலீசார் விசாரிக்கின்றனர்.