உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஐந்து முக்கிய கோவில்களில் ஆணையம்; கவர்னர் ஒப்புதல்

 ஐந்து முக்கிய கோவில்களில் ஆணையம்; கவர்னர் ஒப்புதல்

பெங்களூரு: கர்நாடகாவின் முக்கியமான ஐந்து கோவில்களின் மேம்பாட்டுக்கு, தனித்தனி ஆணையம் அமைக்க, கவர்னர் தாவர்சந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து, ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கர்நாடகாவின் முக்கியமான கோவில்களை மேம்படுத்தவும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யவும், அரசு திட்டமிட்டது. இதற்காக, மைசூரின் சாமுண்டீஸ்வரி கோவில் மேம்பாட்டு ஆணையம், பெலகாவியின் ரேணுகா எல்லம்மா கோவில் மேம்பாட்டு ஆணையம், தொட்டபல்லாபூரின் காடி சுப்ரமண்ய சுவாமி கோவில் மேம்பாட்டு ஆணையம், கொப்பால் மாவட்டம், ஹுலகியின் ஹுலிகெம்மா கோவில் மேம்பாட்டு ஆணையம், சாம்ராஜ்நகரின் மலை மஹாதேஸ்வரா மலை மேம்பாட்டு ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையங்கள் அமைக்கும் மசோதாவுக்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். எனவே, ஐந்து கோவில்களின் மேம்பாடு ஆணையங்கள், செயல்பாட்டுக்கு வருகின்றன. கோவில்களில் தடையின்றி பூஜைகள் நடக்க, அடிப்படை வசதிகளை மேம்படுத்த, இந்த ஆணையங்கள் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை