மேலும் செய்திகள்
நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தீவிரம்
10-Aug-2025
பெங்களூரு, : '' நடைபாதைகளில் உள்ள கடைகளை அதிகாரிகள் தயக்கமின்றி அகற்ற வேண்டும்,'' என பெங்களூரு கிழக்கு மாநகராட்சி கமிஷனர் டி.எஸ்.ரமேஷ் நேற்று உத்தரவிட்டார். நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: பெங்களூரு கிழக்கு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடைபாதைகளின் மீது உள்ள கடைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். இல்லையெனில் அதிகாரிகள் அகற்றுவர். இது போன்ற கடைகளை அதிகாரிகள் எவ்வித தயக்கமின்றி அகற்றலாம். ஏற்கனவே, பெல்லந்துார் பகுதியில் உள்ள 'விப்ரோ' நிறுவனம் அருகிலுள்ள நடைபாதையில் உள்ள கடைகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பாளர்கள் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். பக் ஷாலா பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சமையலறை துாய்மையாக இல்லாததால் அபராதம் விதிக்கப்பட்டது. சி.வி.ராமன் நகரிலிருந்து வரும் வடிகால் சுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டும். சாலையில் உள்ள பள்ளங்கள் உடனடியாக மூடப்பட வேண்டும். ஓல்டு மெட்ராஸ் சாலையில் உள்ள கால்வாய்கள் சுத்தம் செய்யப்பட வேண்டும். வெங்கய்யனா ஏரி அருகே நீர் தேங்கும் பிரச்னையை சரி செய்வதற்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் ஒருங்கிணைந்து அதிகாரிகள் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
10-Aug-2025