உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தேசிய கீதம் குறித்து சர்ச்சை கருத்து பா.ஜ., காகேரிக்கு காங்., கண்டனம்

தேசிய கீதம் குறித்து சர்ச்சை கருத்து பா.ஜ., காகேரிக்கு காங்., கண்டனம்

பெங்களூரு: உத்தர கன்னடா பா.ஜ., - எம்.பி., விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி, ஹொன்னாவரில் நேற்று முன்தினம் நடந்த வந்தே மாதரம் 150வது ஆண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ''தேசிய கீதமான ஜனகண மன, ஆங்கிலேயர்களை வரவேற்க எழுதப்பட்டது. வந்தே மாதரத்தை தேசிய கீதமாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுவாக இருந்தன. ஆனால் நமது முன்னோர்கள், ஜனகண மன பாடலை வைத்திருக்க முடிவு செய்தனர். இதனை நாம் ஏற்று கொண்டோம்,'' என பேசினார். காகேரி பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது. தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கே கூறுகையில், ''ஆர்.எஸ்.எஸ்., காரர்களுக்கு வரலாறு தெரியாது. அவர்கள் தேசிய கொடியை மதிக்கவில்லை. ஜன கண மன ஆங்கிலேயர்களை வரவேற்க எழுதப்பட்டது என்று பா.ஜ., கூறுவது கட்டுக்கதை. தேசிய கீதம், வந்தே மாதரம் குறித்து அரசியலமைப்பு விவாதம் நடக்கட்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை