உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெண்களுக்கு இடஒதுக்கீடு காங்., பொது செயலர் ஆதரவு

 பெண்களுக்கு இடஒதுக்கீடு காங்., பொது செயலர் ஆதரவு

சர்ஜாபூர்: ''பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில், காங்கிரசுக்கு ஆட்சேபனை இல்லை,'' என்று, அக்கட்சியின் பொது செயலர் ஜெயஸ்ரீ கவுடா கூறி உள்ளார். சர்ஜாபூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: ஐந்து மாநில தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், பெண்கள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு தந்திரம் செய்தது. நல்ல வேளையாக அந்த மசோதா தோல்வி அடைந்து விட்டது. பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் காங்கிரசுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் பெண்களுக்கு இடஒதுக்கீடு என்ற பெயரில், தொகுதி மறுவரையறை மசோதாவையும் திணிக்க முயன்றனர். அரசியலுக்காக பெண்கள் உரிமைகளை பயன்படுத்த கூடாது. ராஜிவ் பிரதமராக இருந்த போது அரசியலமைப்பு சட்டம் 73, 74ல் திருத்தம் செய்யப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. தொகுதி மறுவரையறை மசோதாவை ஒதுக்கி வைத்துவிட்டு, கடந்த 2023ல் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற, மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !