உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சொர்ணகுப்பம் சாலை சீரமைப்பு காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆய்வு

சொர்ணகுப்பம் சாலை சீரமைப்பு காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆய்வு

தங்கவயல்: ராபர்ட்சன் பேட்டை சொர்ண குப்பம் - பாரண்ட ஹள்ளி சாலை சீரமைப்புப் பணிகள் துவங்கின.தங்கவயல் தொகுதியில் பெமல் நகர் முதல் மாரி குப்பம் ராஜர்ஸ் கேம்ப் பகுதி வரையில் இரண்டு ஆண்டுகளாக இரட்டை சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.ராபர்ட்சன் பேட்டை சொர்ணா நகர் முதல் பாரண்ட ஹள்ளி வரையில் 34 மீட்டர் சாலை உருவாகிறது. இருபுறமும் தலா இரண்டு மீட்டர் கால்வாய், குடிநீர் குழாய்கள், கேபிள்கள் பதிக்க இடம் ஒதுக்கப்படுகிறது.இதற்கான இடத்தை பொதுப்பணித் துறை அதிகாரிகள் குறியீடு செய்தனர். ஆக்கிரமிப்புகளையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டி குறியிட்டனர்.நகரின் நலன் கருதி தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்ற, ஆக்கிரமிப்பாளர்கள் சம்மதித்தனர்.இந்த பணிகளை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா, சொர்ணா நகர் வார்டு கவுன்சிலர் கருணாகரன் ஆகியோர் பார்வையிட்டனர்.சொர்ணா நகர் முதல் ராஜ்பேட் ரோடு வரையில் சாலை சீரமைப்புப் பணிக்கு 11 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி உள்ளது.இந்நிகழ்ச்சியில் நகராட்சி முன்னாள் தலைவர் ரமேஷ் ஜெயின் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ