ரூ.32,000 கோடி நிலுவை கான்ட்ராக்டர்கள் கோரிக்கை
பெங்களூரு : துணை முதல்வர் சிவகுமாரை, பெங்களூரில் நேற்று முன்தினம் இரவு ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் மஞ்சுநாத் தலைமையில் மூத்த ஒப்பந்ததாரர்கள் சந்தித்து பேசினர். அப்போது, 'நீர்ப்பாசனம் உட்பட 8 துறைகளில் செய்த பணிகளுக்கு, அரசிடம் இருந்து 32,000 கோடி ரூபாய் நிலுவை தொகை வர வேண்டி உள்ளது. 'குறிப்பாக நீர்ப்பாசன துறையில் இருந்து 12,000 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. ஒவ்வொரு ஒப்பந்ததாரருக்கும் தலா 50 லட்சம் ரூபாய் வரை நிலுவை உள்ளது' என, ஒப்பந்ததாரர்கள் எடுத்துக் கூறினர். தசரா முடிந்த பின் முதல்கட்டமாக 2,000 முதல் 3,000 கோடி ரூபாய் வரை விடுவிப்பதாகவும், மீதித் தொகையை அடுத்தடுத்து விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் துணை முதல்வர் உறுதி அளித்துள்ளார்.