உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மொபைல் போனில் மாநகராட்சி திட்டங்கள்

மொபைல் போனில் மாநகராட்சி திட்டங்கள்

 பெங்களூரு மாநகராட்சியில் அனைத்து சேவைகளிலும், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால், சேவை செயல்முறைகள் ஒழுங்குபடுத்தப்படும். பொது மக்களுக்கு சிறந்த சேவைகள் வழங்கும் வகையில் நிர்வாக செயல் திறன் மேம்படுத்தப்படும். பொது மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய துவக்கப்பட்ட 'சஹாயா' இணையதளம் மேம்படுத்தப்படும். சொத்து வரி செலுத்தாதோரை கண்டுபிடிப்பதற்காக, ஏற்கனவே இ - பட்டா / ஆசதி திட்டம் மூலம், சொத்து வரி, வர்த்தக உரிமம், கட்டட திட்டம் ஒப்புதல், பெஸ்காம், குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பிற தொடர்புகளின் தரவுகளை, செயற்கை நுண்ணறிவு மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது.

ஒரு குடையின் கீழ்

 வலைதளங்களால் மட்டும் பொதுமக்கள் தேவையை பூர்த்தி செய்ய முடியாது. தற்போது இச்சேவையை விட, மொபைல் போன் சேவை மூலம், பொது மக்களின் உள்ளங்கையில் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் பல சேவைகளை, மொபைல் போனுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. 'வர்த்தக உரிமம், டெலிகாம் டவர்ஸ், கட்டட திட்டம், சுத்தமான நகர கழிவு மேலாண்மை, ஏரிகள் மேலாண்மை, சொத்து மேலாண்மை உள்ளிட்ட பொது மக்களுக்கு உகந்த செயலியை உருவாக்கி ஒருங்கிணைக்கப்படும். ஏற்கனவே 'பிக்ஸ் பாட் ஹோல், சஹாயா பொது குறைகள், இ பட்டா, விளம்பரம், சொத்து ஜி.பி.எஸ்., என செயலிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த சேவைகள் ஒரே செயலியின் கீழ் கொண்டு வரப்படும். இதற்காக, 'பெங்களூரு - டெக் பெங்களூரு' பிராண்டின் கீழ், 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சேப் சிட்டி

 சட்ட விரோத கட்டடங்கள், சீரழிந்த சாலைகள், மழைநீர் தேங்கும் பகுதிகள், குப்பை பிரச்னைகள், அங்கீகரிக்கப்படாத விளம்பர போர்டுகள், பாதசாரிகள் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். நகரில் உள்ள 'சேப் சிட்டி' கேமராக்கள், பெங்களூரு மாநகராட்சி வாகனங்களில் நிறுவப்பட்ட கேமராக்களில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் பகுத்தாய்வு செய்து செயல்படுத்தப்பட்டு உள்ளன. செயற்கை நுண்ணறிவு உதவியுடன், இந்த அமைப்பு முழு மாநகராட்சிக்கும் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம், மாநகராட்சிக்குள் பல்வேறு திட்டங்களின் கீழ் நிறுவப்பட்ட கேமராக்கள் மூலம் பதிவாகும் தகவல்களை, ஆய்வு செய்வதன் மூலம் பொது மக்களின் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை