உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பவித்ரா கவுடா ஜாமின் மனு தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

 பவித்ரா கவுடா ஜாமின் மனு தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

பெங்களூரு: ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதான பவித்ரா கவுடா, தன் மகள், 10ம் வகுப்பு படிப்பதால் தேர்வு முடியும் வரை இடைக்கால ஜாமின் வழங்கக்கோரி தாக்கல் செய்த மனுவை, 57வது சிட்டி சிவில் செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் பவித்ரா கவுடா, நடிகர் தர்ஷன் உட்பட, 17 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தர்ஷன், பவித்ரா கவுடா உட்பட ஏழு பேரின் ஜாமின் ரத்து செய்யப்பட்டதால், கடந்தாண்டு ஆகஸ்டில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், பவித்ரா கவுடா சார்பில், 57வது சிட்டி சிவில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், '10ம் வகுப்பு படிக்கும் என் மகளுக்கு இந்தாண்டு பொதுத்தேர்வு நடக்கிறது. இந்நேரத்தில் அவருக்கு பக்கபலமாக இருக்க விரும்புகிறேன். எனவே, 20 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும்' என்று கோரியிருந்தார். இம்மனு, நீதிபதி நாயக் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வக்கீல் வாதிடுகையில், ''ரேணுகாசாமி கொலை வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நேரத்தில் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கினால், சாட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம்,'' என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பவித்ரா கவுடாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை