உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  இறைச்சிக்காக கடத்தப்பட்ட மாடுகள் மீட்பு

 இறைச்சிக்காக கடத்தப்பட்ட மாடுகள் மீட்பு

தட்சிண கன்னடா: பிப். 24-: மங்களூரில் இருந்து கேரளாவுக்கு இறைச்சிக்காக கடத்தப்பட்ட மாடுகளை போலீசார் மீட்டனர். ஷிவமொக்கா மாவட்டம், ஷிகாரிபுராவில் இருந்து கேரளாவுக்கு தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு வழியாக இறைச்சிக்காக மாடுகள் கடத்தப்படுவதாக, கத்ரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை 66ல், குறிப்பிட்ட வாகனத்தை மடக்கியபோது, 34 மாடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகளை மீட்ட போலீசார், வாகனத்தில் இருந்து மைசூரு மாவட்டம் பிரியா பட்டணாவை சேர்ந்த தஸ்தகிர் சாப், காதிப் பாஷா, ஆயுப் கான் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ