உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அம்பேத்கர் பிறந்த நாளில் கிரிக்கெட் போட்டிகள்

 அம்பேத்கர் பிறந்த நாளில் கிரிக்கெட் போட்டிகள்

தங்கவயல்: அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனும் ஏ.பி.வி.பி., ஒருங்கிணைப்பாளர் அஜய், தங்கவயலில் அளித்த பேட்டி: அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்., 14ம் தேதியை போதைப் பொருள் ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்க தங்கவயல் ஏ.பி.வி.பி., முன் வந்துள்ளது. இதற்காக ஏப்ரல் 12ம் தேதி முதல், உரிகம் பாம்பே விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன. இதன் இறுதி ஆட்டம் ஏப்ரல் 14ம் தேதி நடக்கிறது. மூன்று நாட்களுமே காலை 9:00 மணிக்கு போட்டிகள் ஆரம்பமாகும். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அணிகள், நுழைவு கட்டணமாக, 2,000 ரூபாய் செலுத்த வேண்டும். வெற்றி பெறும் வின்னர் அணிக்கு 25 ஆயிரம் ரூபாயும், ரன்னர் அணிக்கு 10 ஆயிரம் ரூபாயும் பரிசுத்தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை